காவிரி விவகாரம் குறித்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவை, கர்நாடகா அரசு முறையாக செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
குற்றச்சாட்டு
காவிரி ஆணையத்தின் உத்தரவுகளை கர்நாடகா செயல்படுத்துவதில்லை. ஆகஸ்ட் முதல் தண்ணீர் திறப்பதில் கர்நாடகா பிரச்னை செய்து வருகிறது. 5ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவை கூட கர்நாடகா பின்பற்றவில்லை. ஏதாவது காரணத்தை சொல்லி தண்ணீர் திறப்பதை கர்நாடகா தவிர்க்கிறது. 6,400 கன அடி நீரை திறந்து விட வாய்ப்புள்ளது எனக்கூறிய ஆணையம் பின்னர் 5ஆயிரம் கன அடி நீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது.
காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்தும் காவிரி ஆணையமோ குறைவான அளவு நீரை திறக்க உத்தரவிடுகிறது. தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவை நீரை கேட்கவில்லை; தற்போதைக்கு திறந்து விட வேண்டிய நீரைத்தான் கேட்கிறோம். மழை பற்றாக்குறை இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறோம்; அதற்காக இருக்கும் நீரை கூட பகிர்ந்து கொடுக்க மாட்டார்களா?. இவ்வாறு தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
2,500 கன அடி
தற்போதைய நிலையில் தமிழகத்திற்கு 2,500 கன அடி நீர் மட்டுமே திறக்க முடியும் என உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு: காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுகளை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும்.
தமிழகத்திற்கு கர்நாடகா 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது. இவ்வாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தமிழகத்திற்கு கர்நாடகா 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்பது உறுதியானது.
வாசகர் கருத்து (4)
ஆறுகளின் மேலாண்மையை அனைத்து மாநில அரசியல் சாராத விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
5000 கனஅடி யை அப்படியே திறந்து விட்டாலும் திருச்சி வரை கூட வராது. குடிநீருக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். குறுவை சம்பா தாளடி மூன்றையும் கைவிட வேண்டியதுதான். கையாலாகாத திருட்டுக் கும்பல் ஆட்சியில் வேறென்ன நடக்கும்.
இதெல்லாம் தீயமுக - ஆடும் டிராமா - துரைமுருகனுக்கு அரசியல் பொழுதுபோக்கு - ஏற்கனவே ஜெயலலிதாவால் தீர்க்கப்பட்ட காவிரி பங்கீட்டை மீண்டும் கர்நாடக காங்கிரஸ் கம்பெனியோடு பேசி வைத்தது போல - மீண்டும் மீண்டும் பிரச்சினை இருப்பது போல பூதாகாரப்படுத்தி, மீண்டும் மீண்டும், எதோ திமுகவும் துரைமுருகனும் போராடி கொண்டிருப்பதை போன்ற - மாய தோற்றத்தை ஏற்படுத்தி அரசியல் சதுரங்கம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள் - ஆற்றிய புண்ணை மீண்டும் குதறி போட்டு - மீண்டும் மருந்து போடுவது போல - அமைதியான குட்டையை குழப்பி மீன் பிடிப்பது போல - - தீயமுகவின் குள்ளநரிதானங்கள் - -
தடை விதித்தால் மட்டும் போதாது. ஆணைய உத்தரவை மீறிய கர்நாடக அரசை கடுமையாக எச்சரித்து, ஆணையம் கூறியபடி காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு கொடுக்கவேண்டும் என்றும் ஒரு ஆணையும் பிறப்பிக்க வேண்டும் இந்த உச்சநீதி மன்றம். காவிரி ஆறு என்ன அவர்கள் முப்பாட்டன் சொத்தா...?