நெல்லை ஆட்டோ டிரைவர் கொலையில் நால்வர் கைது
முன்னீர்பள்ளம்:திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே மேலச்செவலை சேர்ந்தவர் விஜயகுமார், 65, ஆட்டோ டிரைவர். கடந்த 16ல் மேலச்செவல் -- கரிசல் செல்லும் சாலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
முன்னீர்பள்ளம் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
முன்னீர்பள்ளம் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
மேலச்செவல் நவநீத கிருஷ்ணசுவாமி கோவிலில் ஊழியராக பணியாற்றியவர் கிருஷ்ணன், 55. கோவில் வளாகத்தில் சிலர் மது அருந்தியதை கண்டித்தார். இதனால் கடந்த ஜனவரியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதில் சிலர் கைது செய்யப்பட்டனர்.
அந்த கொலைக்கு பழிக்கு பழியாக எதிர்தரப்பை சேர்ந்த யாரையாவது கொலை செய்ய கிருஷ்ணனின் மகன்கள் உள்ளிட்டோர் திட்டமிட்டனர். அதன்படி, கடந்த 16ல் ஆட்டோ டிரைவர் விஜயகுமாரை கொலை செய்தனர்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
வழக்கில் கோவில் ஊழியர் கிருஷ்ணனின் மகன்கள் நவநீத கிருஷ்ணன் (எ) கண்ணன், 25, முப்பிடாதி, 20, மற்றும் மாயாண்டி, 21, நடுக்கல்லுார் பேச்சிமுத்து, 20, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, நான்கு நாட்களுக்கு பின், விஜயகுமாரின் உடல் நேற்று உறவினர்களிடம்ஒப்படைக்கப்பட்டு இறுதி சடங்குகள் நடந்தன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!