Advertisement

ஆட்டோ டிரைவர் கொலையில் நான்கு பேரிடம் விசாரணை

திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே ஆட்டோ டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே மேலச்செவல் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் 65, ஆட்டோ டிரைவர். கடந்த 16ம் தேதி மேலச்செவல் - கரிசல் செல்லும் சாலையில் மழை நீர் கால்வாய் ஓடை அருகே சென்றபோது ஒரு கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. முன்னீர்பள்ளம் போலீசார் விசாரித்தனர்.

குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்க கோரியும் கடந்த மூன்று நாட்களாக மேலசெவலில் ஊர் கூட்டம் நடத்தி வலியுறுத்தினர். இறந்தவரின் குடும்பத்திற்கு ஆதரவாக மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் மகாராஜன் உள்ளிட்டவர்கள் நேற்று மேலச்செவல் வந்திருந்தனர்.

மேலச்செவலில் சில மாதங்களுக்கு முன் நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிகிறது. நான்கு பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இப்பிரச்னையில் ஆட்டோ டிரைவர் விஜயகுமார் உடலை 3வது நாளாக நேற்றும் அவரது உறவினர்கள் பெற்றுக் கொள்ளவில்லை.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement