Advertisement

குப்பை அள்ள போதிய கட்டமைப்புகள் இல்லை * ரூ.2.75 கோடி வீணாவதாக அ.தி.மு.க., புகார்

திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சியில் குப்பை அள்ள சென்னை நகராட்சிகளின் ஆணைய அதிகாரிகளால் டெண்டர் கொடுக்கப்பட்ட ராம் அன் கோ நிறுவனத்திடம் குப்பை அள்ள போதிய கட்டமைப்புகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் மூலம் மாதத்திற்கு ரூ.2.75 கோடி வீணாவதாக அ.தி.மு.க., புகார் தெரிவித்தது.

மாநகராட்சியில் குப்பை அள்ளும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் 345 பேர், சுய உதவி குழுவினர் 700 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தவிர ஜெயராம் அன் கோ உட்பட இரு தனியார் நிறுவனங்கள் செயல்பட்டும் வருகின்றன. அந்த தனியார் நிறுவனங்களுக்கு பதிலாக தமிழக முழுவதும் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ள ராம் அன் கோ என்ற நிறுவனத்தை சென்னை நகராட்சி ஆணைய அதிகாரிகள் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

ஆனால் அந்த நிறுவனத்திடம் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை எனக்கூறி அவர்களுக்கு டெண்டர் வழங்க மேயர் சரவணன் (தி.மு.க.,) மறுத்தார். அவரையும் மீறி சென்னை நகராட்சிகளின் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து ராம் அன் கோ நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டது. ஜூலை 27 முதல் திருநெல்வேலி மாநகராட்சியில் தூய்மை பணியில் ராம் அன் கோ ஈடுபட்டது. அந்த நிறுவனத்தினர் திருநெல்வேலியில் ஏற்கனவே இருக்கும் தூய்மை பணியாளர்கள் 578 பேரை பயன்படுத்தி தூய்மை பணியில் ஈடுபட்டதாக கணக்கு காண்பித்தனர். தூய்மை பணிக்கான இயந்திரங்கள், லாரிகள் எதையும் கொண்டு வரவில்லை.

578 பேருக்கு சம்பளமாக மாநகராட்சி நிர்வாகம் ரூ.ஒரு கோடி வழங்கியது. மேயர் சரவணன் நேற்று நடத்திய குறைதீர் கூட்டத்தில் அ.தி.மு.க., நிர்வாகி அன்பு அங்கப்பன் தலைமையில் நிர்வாகிகள் மனு அளித்தனர். தூய்மை பணி மேற்கொள்ள மாதத்திற்கு ரூ.2.75 கோடி வாங்கும் ராம் அன் கோ நிறுவனத்திடம் கட்டமைப்பு வசதி இல்லாதது ஏமாற்று வேலை என அதில் குற்றம் சாட்டினர். மாநகராட்சியில் ஏற்கனவே இருக்கும் துப்புரவு பணியாளர்கள் மூலமே தூய்மைப் பணி மேற்கொள்ளலாம். ராம் அன் கோ போன்ற எந்த அடிப்படை கட்டமைப்பும் இல்லாத நிறுவனத்திற்கு மாதம் ரூ 2.75 கோடி தருவது வீண் செயல். இந்த நிறுவனத்துக்கு ஆதரவாக சென்னையில் உள்ள நகராட்சிகளின் ஆணையர் அலுவலகத்தில் திருநெல்வேலி மாநகராட்சிக்கு அழுத்தம் கொடுத்தனர் எனவும் குற்றம் சாட்டினர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ராம் அன் கோ நிறுவனம் தமிழகம் முழுவதும் தூய்மைப் பணி மேற்கொள்வதால் இந்த மாநகராட்சியிலும் பணி வழங்கப்பட்டது. பணியாற்றும் ஒவ்வொரு தூய்மை பணியாளர் குறித்தும் புள்ளி விவரம் உள்ளது.

ஒரு மாத சம்பளம் ரூ. ஒரு கோடி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.ஒரு கோடியே 75 லட்சத்தை தர மறுத்து விட்டோம். ஒரு பைசா கூட அதிகம் தரவில்லை.

அடுத்த மாதத்தில் இருந்து ராம் அன் கோ முழுமையான கட்டமைப்புடன் செயல்பட வலியுறுத்தியுள்ளோம், என்றார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement