முன்னாள் அமைச்சர் மீது பாய்ந்தது வழக்கு
துாத்துக்குடி : தி.மு.க.,வினரை அவதுாறாக பேசியதாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் மீது விளாத்திகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் நடந்த அ.தி.மு.க., பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன், தி.மு.க., - எம்.பி கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் குறித்து அவதுாறாக பேசியதாக அவர் மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!