தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்
திருநெல்வேலி : திருநெல்வேலியில் நேற்று பகலில் ஒரு ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து நகர் முழுவதும் வட்டமடித்தது.
வழக்கமாக ஒரு முறை கடந்து போகும் ஹெலிகாப்டர் நேற்று ஒரு மணி நேரத்துக்கு மேலாக திருநெல்வேலியை வளைய வந்தது.
அடுத்த வாரம் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு இந்திய முப்படை தளபதிகள் வர இருப்பதாகவும் அதன் முன்னோட்டமாக கடற்படை ஹெலிகாப்டர் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொண்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!