Advertisement

விநாயகர் சிலை தயாரிப்புக்கு தடை: நெல்லையில் போலீசார் அடாவடி

ADVERTISEMENT
திருநெல்வேலி:தமிழகத்தில் வரும் 18ல் சதுர்த்தி வழிபாட்டிற்கு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் கூடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி அருகே கிருபாநகரில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மோடாராம் என்பவர் விநாயகர் சிலை செய்யும் கூடம் நிறுவி, குடும்பத்தினர் 10 பேருடன் பல மாதங்களாக சிலை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த இரண்டு நாட்களாக, கூடத்தைச் சுற்றிலும் இரவு, பகலாக போலீசாரை நிறுத்தி உள்ளனர். அவர்களை வெளியே வராத படியும், வெளியிலிருந்து யாரும் சிலைகள் வாங்க உள்ளே செல்ல முடியாதபடியும் இரும்பு தடுப்புகள் அமைத்து தடை விதித்துள்ளனர்.

இதை அறிந்த ஹிந்து முன்னணியினர், போலீசாருடன் பேசினர். அதன் பிறகும், இயல்பு நிலை திரும்பவில்லை. கெடுபிடி மேலும் அதிகரித்தது.

இதுகுறித்து, சிலை தயாரிப்பாளர் மோடாராம் கூறியதாவது:

நான் சிறுவயதில் இருந்தே, 20 ஆண்டுகளுக்கு மேலாக திருநெல்வேலியில் தங்கி இந்த தொழிலில் தான் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை ஒரு முறை கூட போலீசாரோ உயர் அதிகாரிகளோ வந்து எதுவும் கூறியதில்லை. இந்த ஆண்டு மிகவும் கெடுபிடி செய்கின்றனர். விநாயகர் சிலை செய்யும் இடத்தில் ஏதோ வெடிகுண்டு தயாரிப்பது போல சோதனை மேற்கொள்கின்றனர்.

இதற்காக கடன் பெற்று தொழில் செய்கிறேன். தற்போது சிலைகள் விற்பனையை தடுத்தால் எங்களுக்கு கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்படும.

இவ்வாறு அவர் கூறினார்.

இங்கு தயாரிக்கப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வழிபாட்டுக்கு அனுப்பலாமா, இல்லையா என்பதற்காக, திருநெல்வேலி கலெக்டர் முடிவுக்கு காத்திருக்கின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement