நெல்லை மேயர் நீக்கமில்லை அமைச்சர் பேச்சில் முடிவு
திருநெல்வேலி : திருநெல்வேலி மேயர் சரவணனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தி.மு.க., கவுன்சிலர்களின் கோரிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு நிராகரித்தார்.
திருநெல்வேலி தி.மு.க., மேயர் சரவணன், மாநகராட்சியின் பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்தும் போது, ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் பெறுவதற்காக கோப்புகளை தாமதப்படுத்துகிறார் என்ற புகார் எழுந்தது.
மொத்தமுள்ள, 55 கவுன்சிலர்களில், 40க்கும் மேற்பட்டோர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கையெழுத்திட்டு, முதல்வர் ஸ்டாலினுக்கு புகார் அனுப்பினர்.
இதற்கிடையே, தாழையூத்து சிமென்ட் ஆலை விருந்தினர் மாளிகையில் மாவட்ட பொறுப்பு அமைச்சரான, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் பேச்சு நடந்தது.
மாவட்ட செயலர் டி.பி.எம். மைதீன் கான், எம்.எல்.ஏ., அப்துல் வஹாப், மேயர் சரவணன், துணை மேயர் ராஜு உட்பட பலர் பங்கேற்றனர்.
முடிவில், 'மேயர் பதவியிலிருந்து சரவணன் மாற்றமில்லை; அனைத்து கவுன்சிலர்களையும் அரவணைத்து செல்ல வேண்டும். தலைமைக்கு இனி புகார் வரக்கூடாது' என, முடிவானது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!