Advertisement

மாணவியருக்கு கட்டாய ஹிஜாப்: பள்ளி மீது வழக்கு

ADVERTISEMENT
போபால்: மத்திய பிரதேசத்தில், 'ஹிஜாப்' அணியும்படி மாணவியரை கட்டாயப்படுத்தியதாக தனியார் பள்ளி நிர்வாகம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ம.பி.,யில் டாமோ மாவட்டத்தில், கங்கா ஜமுனா என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு, அனைத்து மதத்தைச் சேர்ந்த மாணவியரும் தலையை மறைக்கும் வகையிலான, 'ஹிஜாப்' போன்ற துணியை அணிந்து வரும்படி பள்ளி நிர்வாகம் உத்தர விட்டதாக தெரிகிறது. இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரித்தபோது, 'எங்கள் பள்ளியின் சீருடையே இது தான்' என, தெரிவித்தனர்.

இதையடுத்து, பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, மாநில கல்வித்துறை சமீபத்தில் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த பள்ளி நிர்வாகத்தின் மீது, மத உணர்வுகளை துாண்டுவது, மிரட்டல் விடுப்பது போன்ற பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து, ம.பி., மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஷ்ரா கூறியதாவது: பள்ளி நிர்வாகத்தின் மீதான புகார் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இந்த விசாரணையின் முடிவில் வெளியாகும் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் தப்ப முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து (3)

  • sankar - Nellai,இந்தியா

    இதுவும் தவறுதான் -

  • Bellie Nanja Gowder - Coimbatore,இந்தியா

    முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ பள்ளிகளில் மட்டுமே இது போன்ற பிற்போக்கு தனமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்து பள்ளிகளில் இது போன்ற நடவடிக்கைகள் இல்லை. இது கடுமையாக கண்டிக்க பட வேண்டியவை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement