மாணவர்களுக்கான கிரெடிட் முறை: யு.ஜி.சி., நிபுணர் குழு புது பரிந்துரை
இந்த செய்தியை கேட்க
சான்றிதழ்:
புதிய கல்விக் கொள்கையின்படி, கல்லுாரிகளில் குறிப்பிட்ட ஆண்டுக்கான படிப்புகளில், இடையில் மாணவர்கள் வெளியேறினாலும், அவர்கள் படித்த காலத்தின் அடிப்படையில், சான்றிதழ், பட்டயம் அல்லது பட்டம் அளிக்கப்படும். இந்த முறை தொடர்பாக, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழுவின் நிபுணர் குழு ஆய்வு செய்துஉள்ளது. அது அளித்துள்ள பரிந்துரையில் கூறப்பட்டு உள்ளதாவது: குறிப்பிட்ட ஆண்டுகள் படித்தால் தான், சான்றிதழ், பட்டயம் அல்லது பட்டம் பெற முடியும் என்ற நிலை உள்ளது.
வாய்ப்பு
இதில் சிறிது மாற்றம் செய்து, மாணவர்கள் குறிப்பிட்ட அளவுக்கு கிரெடிட் மதிப்பெண்கள் பெற்றாலே, அதனடிப்படையில் சான்றிதழ், பட்டயம் அல்லது பட்டம் பெறுவதற்கான வாய்ப்பு தரப்பட வேண்டும். இதை இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கும் அறிமுகம் செய்ய வேண்டும். இதனால், அதிக காலம் காத்திராமல், மாணவர்கள் தங்களுக்கு வேண்டிய தகுதியை நிர்ணயித்து கொள்ள முடியும். மேலும், இது அவர்களுடைய கல்வித் திறனை உயர்த்தவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது நல்ல யோசனை சோதனை முறையில், அதிக கல்வியறிவு பெற்ற தமிழகம் போன்ற மாநிலங்களில் முயற்சித்து பார்த்தது, பின்பு இந்தியாவில் முழுவதும் விரிவாக்கம் செய்ய வேண்டும்.இதில் ஒரு சில நடைமுறை Mera sharirசிக்கல்கள் உள்ளன, எப்பொழுதுமே பழமையிலிருந்து, புதுமைக்கு மாறும்போது ஒரு தயக்கம் இருக்கும், ஒரு சில இடர்பாடுகளும் இருக்கும். கணிதம்,இயற்பியல் போன்ற பாடங்கள் படிக்கும்போது பட்டயம்,பட்டம் முதலியவற்றை பெறும் பொழுது அந்தத் தகுதிக்குரிய வேலை வாய்ப்பு என்ன என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பாடத்திட்டம் அதற்கேற்ப இயற்றப்பட்டிருக்க வேண்டும். தொழிற்சாலை மற்றும் கல்வி நிலைய இணைப்பு அவசியம் (Academic Industry Interaction AII). பேராசிரியர் வடிவேல் முருகன் மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரி மதுரை