Advertisement

பெண்ணை கொன்று உடல் உறுப்புகளை குக்கரில் வேக வைத்த சைக்கோ கைது

ADVERTISEMENT
மஹாராஷ்டிராவின் மும்பை அருகே கீதா நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அங்கு வசித்து வந்தவர்கள் கூறியதை அடுத்து, சம்பந்தப்பட்ட வீட்டில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கிருந்து பெண் ஒருவரின் உடல் பாகங்களை அழுகிய நிலையில் கண்டெடுத்த போலீசார், வீட்டில் இருந்த மனோஜ் சானே, 56, என்பவரை கைது செய்தனர். விசாரணையில், மனோஜ் சானே, சரஸ்வதி வைத்யா, 32, இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்தது தெரியவந்தது.

இது குறித்து மும்பை துணை போலீஸ் கமிஷனர் ஜெயந்த் பஜ்பலே கூறியதாவது: முதற்கட்ட விசாரணையில், சரஸ்வதியை மனோஜ் கொடூரமாக கொன்றது தெரியவந்துள்ளது. உடல் பாகங்களை துண்டு துண்டுகளாக வெட்டி குக்கரில் வைத்து வேக வைத்ததும், பல இடங்களில் பாதுகாத்து வைத்ததும் தெரிய வந்துஉள்ளது. கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

நெல்லையில் ரூ.1.5 கோடி கொள்ளையடித்தவர்கள் மூணாறில் சிக்கினர்



திருநெல்வேலி அருகே நகை வியாபாரியை தாக்கி, 1.5 கோடி ரூபாய் கொள்ளையடித்த சம்பவத்தில், கேரளாவைச் சேர்ந்த இருவரை, சினிமாவில் வருவதை போல, 'சேஸ்' செய்து மூணாறில் போலீசார் சுற்றிவளைத்தனர்.

வாலிபர் வெட்டி கொலை; பட்டப்பகலில் பயங்கரம்



திண்டுக்கல்லில் பெத்தைய கவுண்டன்பட்டியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி அழகுபாண்டி 25, முன் விரோதம் காரணமாக இருவரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். திண்டுக்கல், பெத்தையன்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி அழகுபாண்டி, 25. தாடிக்கொம்பு சாலையில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்கிறார்.

நேற்று மதியம் திண்டுக்கல் - பழநி ரோடு, முருகபவனம் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்ப பைக்கில் வந்தார். அப்போது, பைக்கில் வந்த இருவர், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் அழகுபாண்டியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். அதிர்ச்சியடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அலறி ஓடினர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருப்பது தெரிந்தது.

மறுவாழ்வு மையத்தில் தொழிலாளி கொலை; 4 பேர் கைது



நாகை மாவட்டம், வேதாரண்யம், மேல வீதியில், தனியார் போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில், திருவாரூர் மாவட்டம், கரையங்காடு கிராமத்தைச் சேர்ந்த முருகேசன், 47, என்ற தொழிலாளி சிகிச்சை பெற்று வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பூட்டை உடைத்து தப்பிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மறுவாழ்வு மைய உரிமையாளர் மணிகண்டன், மேலாளர் வேல்முருகன் மற்றும் பணியாளர்கள், முருகேசனை துாணில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த முருகேசன் இறந்தார்.

இந்நிலையில், முருகேசன் கழிப்பறையில் வழுக்கி விழுந்து விட்டதாகவும், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது இறந்து விட்டதாகவும், வேதாரண்யம் போலீஸ் ஸ்டேஷனில் மைய நிர்வாகிகள் தெரிவித்தனர். எஸ்.பி., ஹர்ஷ் சிங் மறுவாழ்வு மையத்திற்கு சென்று நடத்திய விசாரணையில், முருகேசன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. வேதாரண்யம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, மைய உரிமையாளர் மணிகண்டன், 36, மேலாளர் வேல்முருகன், 38, பணியாளர்கள் ஷாம் சுந்தர், 35, தீபக் குமார், 33, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

82 திருட்டு வழக்குகளில் சிக்கிய திருச்சி வாலிபர் மீண்டும் கைது



சேலம் சீலநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, கந்தம்பட்டி, திருவாக்கவுண்டனுார், குரங்குச்சாவடி, மாமாங்கம் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான ஹோட்டல்கள் உள்ளன. அங்கு நிறுத்தப்படும் கார்களின் பின்புற கண்ணாடிகளை உடைத்து மடிக்கணினி, 'ஸ்மார்ட் வாட்ச்', பணம், மொபைல் போன் ஆகியவற்றை மர்ம கும்பல் திருடி வந்தது. பிப்ரவரி முதல் ஜூன், 1 வரை, சூரமங்கலம், அன்னதானப்பட்டி, பள்ளப்பட்டி, அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷன்களில், 11 திருட்டு வழக்குகள் பதிவாகின.

அன்னதானப்பட்டி உதவி கமிஷனர் அசோகன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரித்தனர். நேற்று முன்தினம், திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அருகே சிறுகாம்பூரைச் சேர்ந்த ரகுபதி, 27, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மடிக்கணினி, ஐ பேடு, மொபைல் போன், ஒரு சவரன் சங்கிலியை மீட்டனர். அவரது கூட்டாளியான திருச்சி, ராம்ஜி நகரைச் சேர்ந்த குணா, 32, என்பவரை தேடுகின்றனர். ரகுபதி மீது தமிழகம் முழுதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், 82 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கவுன்சிலர் மகள் கொலை 17 வயது சிறுவன் கைது



தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில், தர்மபுரி நகராட்சி, எட்டாவது வார்டு தி.மு.க., கவுன்சிலர் புவனேஸ்வரன் மகள் ஹர்ஷா, 23, நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணையில், தேன்கனிக்கோட்டை வாலிபர், தர்மபுரியைச் சேர்ந்த, 17 வயது சிறுவன் ஆகியோர் அதிக நேரம் அவரிடம் போன் பேசியது தெரிந்தது. விசாரணையில், சிறுவன் ஹர்ஷாவை கொலை செய்தது உறுதியானது. இதனையடுத்து சிறுவன் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான்.

ஆப்கனில் குண்டு வெடிப்பு: 11 பேர் பலி



ஆப்கானிஸ்தானின் படாக் ஷன் மாகாண துணை கவர்னராக இருந்தவர் நிசார் அகமது. இவர், நேற்று முன்தினம் பைசாபாதில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். இந்நிலையில், நிசார் அகமதுவின் நினைவஞ்சலி கூட்டம் படாக் ஷனில் உள்ள நபாவி மசூதியில் நேற்று நடைபெற்றது. அப்போது, அங்கு திடீரென குண்டு வெடித்ததில் முன்னாள் போலீஸ் அதிகாரி சபியுல்லா சமீம் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர்; 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.



வாசகர் கருத்து (5)

  • Deiva Prakash - Coimbatore,இந்தியா

    இப்போ இவன் சார்ந்த மதத்தை பற்றி பேச யாரும் இல்லையா ? வழக்கமா ஆரூரங், வடிவேல் தலைமையில் ஒரு குரூப் வருமே. ஓ அது வேற மதத்தை சேர்த்தவங்க தப்பு செஞ்ச மட்டும்தான் பொங்குவாங்களோ ?

  • R Kay - Chennai,இந்தியா

    அமைதிப்பூங்கா எங்கள் டாஸ்மாக் குன்றியம்.

  • பாரதி -

    டீவி சீரியல்களை பார்க்கப் பார்க்க எல்லோர் நிலைமையும் இதுதான்...

  • mrsethuraman - Bangalore,இந்தியா

    சமையல் செய்ய வந்தவளை குக்கரில் சமையல் செய்கிறானே சண்டாளன்.

  • அப்புசாமி -

    இவனுக்கு எதுக்கு கைது புண்ணாக்கெல்லாம்? போட்டுத் தள்ளப்பட வேண்டிய கேஸ்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement