Advertisement

கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு ஞானவாபி வழக்கு தொடர்ந்த பெண் மனு

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் சுவரில் இடம்பெற்றுள்ள ஹிந்து கடவுள்களை வழிபடுவதற்கு அனுமதி கேட்டு வழக்கு தொடர்ந்த பெண், தொடர் நெருக்கடிகள் வருவதால், கருணை கொலை செய்ய அனுமதி கேட்டு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் சுவரில் உள்ள ஹிந்துக் கடவுள்கள் சிலைகளை வழிபடுவதற்கு அனுமதி கேட்டு பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

ஐந்து பெண்கள் இந்த வழக்குகளை தொடர்ந்தனர். 'இந்த வழக்குகள் விசாரணைக்கு உகந்தவை' என, அலகாபாத் உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், வழக்கு தொடர்ந்துள்ள விஸ்வ வேதிக் சனாதன சங்கத்தின் தலைவரான ஜிதேந்திர சிங் விசேன், சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். பல்வேறு தரப்பில் இருந்து நெருக்கடிகள் வருவதால், தானும், தன் மனைவி கிரண் சிங், உறவினர் ராக்கி சிங் ஆகியோர் தாக்கல் செய்த வழக்குகளை திரும்பப் பெறுவதாக அவர் கூறினார்.இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, ராக்கி சிங் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதில், 'எங்களுடன் இணைந்து வழக்கு தொடர்ந்துள்ளவர்கள் மற்றும் வழக்கறிஞர்களால் தொடர்ந்து எங்களுடைய குடும்பங்களுக்கு மிரட்டல், நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இதனால் என்னை கருணை கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்' என, அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை 9:00 மணி வரை பதிலுக்காக காத்திருப்பதாகவும், அதன்பின் உரிய முடிவை எடுக்கப் போவதாகவும் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதை எதிர் தரப்பு மறுத்துள்ளது. ''பொய்யான தகவல்களை ராக்கி சிங் கூறியுள்ளார்,'' என, மற்ற மனுதாரர்களின் வழக்கறிஞர் ஹரிசங்கர் ஜெயின் கூறியுள்ளார்.வாசகர் கருத்து (6)

 • Aldrin - Mumbai,இந்தியா

  எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை மசூதி சுவரில் தான் வழிபடவேண்டும் என்று அடம் பிடிப்பானேன். போய் பள்ள குட்டீங்கள படிக்க வையுங்கள். அவர்களாவது மதம் பிடிக்காமல் ஆக்க பூர்வமான வேலைகளில் ஈடுபடட்டும்.

 • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

  இதே நிலைமை நேர் எதிரிமாறாக இருந்தால், அதாவது ஒரு புனிதமாகக் கருதப்படும் இஸ்லாமிய கட்டிடத்தை இடித்து, அதன் மேல் இன்னொரு மதத்தின் வழிபாடு கட்டிடத்தைக் கட்டி, பழைய கட்டிடம் இன்னும் தெரியும்படியாக இருந்தால், இவர்கள் மயிலே, மயிலே இறகு போடு என்று நீதிமன்றத்தை நோக்கி அலைந்துகொண்டிருக்க மாட்டார்கள். வன்முறையை உபயோகித்து, ஊரெல்லாம் கொளுத்தி, தரை மட்டமாக்கி, உடனே எடுத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் மற்றவர்கள் இவர்களை பார்த்து பயந்து, சட்டங்களையே இவர்களுக்கு சாதகமாக மாற்றி எழுதி, இன்று மயில் எப்போது இறகு போடும் என்று தவம் கிடக்கிறார்கள். எத்தனை கேவலமான நிலைமை? நாம் பெரும்பான்மையினராக இருக்கும் ஒரே நாட்டிலேயே இந்த அவளை நிலைமை. இந்தியாவெங்கும் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் இந்து கோயில்கள் இந்த மாதிரி இடிக்கப்பட்டு, அவற்றின் மேல் மசூதிகள் கட்டப்பட்டுள்ளன.

 • Kanagaraj M - Pune,இந்தியா

  கருணை கொலை செய்ய சொல்லும் அளவுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சனையே கிடையாது. பாண்டஸி ஸ்டோரில் நீங்களே கடவுள் சிலையை வாங்கி வழிபட்டுக்கொள்ளலாம்.

 • பாரதி -

  இது பேருக்குத்தான் சுதந்திர நாடு. நீதி மன்றம், காவல்துறை... எல்லாம் சிறுபான்மையினருக்கு பயந்து அடங்கியவர்கள் தான் நடப்பில்...

 • Ramaraj P -

  நந்தி சிவனுக்கு முன் இருக்கும். ஆனால் இங்கு நந்தி மட்டும் உள்ளது நந்திக்கு எதிரில் இந்த மசூதி உள்ளது.கண்டிப்பாக இந்த மசூதிக்குள் சிவன் சிலை இருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement