6 கிலோ கஞ்சாவுடன் சிக்கியவருக்கு சிறை
திருவல்லிக்கேணி:பெரியமேடு, மூர்மார்க்கெட் அருகில் நேற்று, வாலிபர் ஒருவர் கஞ்சா பொட்டலத்துடன் நின்றுள்ளார். இதுகுறித்த தகவலின்படி சென்ற, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், அந்த வாலிபரை கைது செய்தனர். அவரிடம், 6.5 கிலோ கஞ்சா பொட்டலம் இருந்தது. விசாரணையில் அவர் நாகப்பட்டினம், தீத்தகுடியைச் சேர்ந்த கபிலன், 25, என தெரிந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!