ADVERTISEMENT
ராமாபுரம்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, ராமாபுரம் நாயுடு சாலையில் தார்ச் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
வளசரவாக்கம் மண்டலம், ராமாபுரம் 154வது வார்டில், நாயுடு சாலை உள்ளது.
இச்சாலை, ராமாபுரம் மற்றும் வளசரவாக்கம் - போரூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.
மாநில நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பின் கீழ் உள்ள இச்சாலையில், பிள்ளையார் கோவில் அருகே சாலை குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.
இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டதுடன், சாலையில் இருந்து பறக்கும் புழுதியால், பகுதி மக்களும் அவதிப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, அப்பகுதியில் நேற்று, தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இன்னமும் ஜாதி பெயரில் தெருக்கள் தலை நகரில் இருக்கிறதா ? அரசு தூங்கிக் கொண்டு இருக்கிறதா ? இன்னமும் விடியல் வரவில்லை போலும்.