பள்ளி சாலையில் தேங்கிய குப்பை அகற்றம்
திருமங்கலம்:நம் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, இரண்டு வாரங்களாக பள்ளி சாலையோரத்தில் தேங்கி இருந்த குப்பை அகற்றப்பட்டது.
அண்ணா நகர் மண்டலம், 104வது வார்டு திருமங்கலம் பகுதியில், பள்ளி சாலை உள்ளது. இந்த சாலையில், தனியார் பள்ளிகள் உட்பட திருமங்கலம் காவல் நிலையம், மாற்றுத்திறனாளிகள் பள்ளி என, ஏராளமானவை இயங்கி வருகின்றன.
அண்ணா நகர் மண்டலம், 104வது வார்டு திருமங்கலம் பகுதியில், பள்ளி சாலை உள்ளது. இந்த சாலையில், தனியார் பள்ளிகள் உட்பட திருமங்கலம் காவல் நிலையம், மாற்றுத்திறனாளிகள் பள்ளி என, ஏராளமானவை இயங்கி வருகின்றன.
இவ்வளவு முக்கியமான சாலையின் ஓரத்தில், கடந்த இரண்டு வாரங்களாக குப்பை தேங்கி, சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
குறிப்பாக, பள்ளி சாலைக்கு உட்பட்ட கிழக்கு பிரதான சாலையில், சென்னை மாநகராட்சி முறையாக குப்பையை கையாளுவது கிடையாது.
இதனால், கடந்த இரண்டு வாரங்களாக அப்பகுதியில் குப்பை தேங்கியது.
இப்பிரச்னை, தொடர்ந்து இப்பகுதியில் நீடிக்கிறது. பள்ளி திறப்புக்குள், இப்பகுதியில் தேங்கியுள்ள குப்பையை அகற்றி, சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, அப்பகுதியில் இருந்த குப்பையை, மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!