Advertisement

ரவுடி கும்பலை பிடிக்க உதவிய பெண் போலீசுக்கு பாராட்டு

ADVERTISEMENT
அண்ணாசதுக்கம்:சென்னை, மெரினா கடற்கரை, பொதுப்பணித்துறை அலுவலகம் எதிரே உள்ள சர்வீஸ் சாலையில், மாலை காதல் ஜோடி ஒன்று, இரு சக்கர வாகனத்தில் வந்தனர்.

அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில், எதிர் திசையில் வந்த நான்கு பேர் கும்பல், காதல் ஜோடியின் இருசக்கர வாகனத்தில் மோதிவிட்டு, தகராறில் ஈடுபட்டுள்ளனர். கஞ்சா போதையில் இருந்த அவர்கள், காதலன் எதிரில் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர்.

இதை தட்டிக்கேட்ட காதலனை தாக்கி, மொபைல்போனை பறித்ததால், அப்பெண் கூச்சலிட்டுள்ளார். உடனே, அங்கு பணியில் இருந்த ஆயுதப்படை பெண் போலீஸ் கலா விரைந்து சென்று, போதை கும்பலிடம் தைரியமாக பேசி, அந்த பெண்ணை காப்பாற்றினார்.

அப்போது அந்த கும்பல், கலாவை கொலை செய்து விடுவதாக மிரட்டிவிட்டு, வாகனங்களில் தப்பியுள்ளனர். உடனே, அவர்களின் வாகன பதிவெண்களை குறித்துக் கொண்ட அவர், அண்ணாசதுக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

உடனே, சம்பந்தபட்ட நான்கு பேரையும் அதே பகுதியில் வைத்து போலீசார் மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் திருவல்லிக்கேணி, வால்டாக்ஸ் சாலையைச் சேர்ந்த உதயகுமார், 24, தமிழரசன், 25, சோமசுந்தரம், 24, வசந்தகுமார், 23, என தெரிந்தது. இதில் உதயகுமார், தமிழரசன் மீது, 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

ரவுடி கும்பலை உடனே பிடிக்க உதவிய பெண் போலீஸ் கலாவுக்கு, பாராட்டு குவிகிறது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement