Advertisement

கிளாம்பாக்கம் அருகே வடிகால் அமைப்பதில் சிக்கல் வரைவு திட்டமின்றி ஒப்புதல் கேட்பதா? கிளாம்பாக்கத்தில் வடிகால் அமைப்பதில் சிக்கல்

சென்னை:கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அருகில் மழை நீர் வடிகால் அமைக்கும் திட்டத்துக்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஒப்புதல் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு உள்ளது.

வரைவு திட்டம்?



இந்த வளாக நுழைவாயில் பகுதியில் நெரிசல் தடுப்பு ஏற்பாடுகள் முடியாத நிலையில், திறப்பு விழா ஜூலைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையம் முகப்பு பகுதியில், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக, புகார் எழுந்தது.

இதையடுத்து, 'கிளாம்பாக்கம் முனையத்தில் இருந்து ஊரப்பாக்கம் ஏரி வரை, 17 கோடி ரூபாயில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்' என, சி.எம்.டி.ஏ.,வுக்கான அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.

இதன்படி, ஜி.எஸ்.டி., சாலையின் இரண்டு பக்கத்திலும் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான வரைவு திட்டத்தை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தயாரித்தனர்.

இதற்கு ஒப்புதல் கோரி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மண்டல அலுவலக அதிகாரிகளுக்கு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கடிதம் எழுதினர்.

இதற்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் அனுப்பிய பதில், சி.எம்.டி.ஏ., அதிகாரிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

காரணம், ஜி.எஸ்.டி., சாலையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்கு ஒப்புதல் கேட்டு அனுப்பிய கடிதத்தில், வரைவு திட்ட பிரதி இல்லை.

அறிவுறுத்தல்



வரைவு திட்ட ஆவணம் இல்லாமல், ஒப்புதல் அளிப்பது சாத்தியமில்லை.

எனவே, மழைநீர் வடிகால் பணிக்கான வரைவு திட்ட பிரதியை மத்திய அரசின் விதிகள், இந்திய சாலை அமைப்பு விதிகளுக்கு உட்பட்டு இணைத்து, செங்கல்பட்டில் உள்ள திட்ட அலுவலருக்கு அனுப்பும்படி, பதில் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

திட்டத்திற்கான வரைவு திட்ட பிரதியை இணைக்காமல், மத்திய அரசு துறையிடம் ஒப்புதல் கோரி கடிதம் அனுப்பிய சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், தங்களது உயரதிகாரிகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement