குழந்தையை கொன்று தாய் தற்கொலை
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம், சிலார் தெருவைச் சேர்ந்தவர் மதன்குமார், 32; டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி சரண்யா, 25. தம்பதியின் 3 வயது ஆண் குழந்தை ஜிஷ்ணு.
சரண்யா, வேலைக்கு சென்று வந்தார். இது, கணவன் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
சரண்யா, வேலைக்கு சென்று வந்தார். இது, கணவன் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று முன்தினம் நடந்த சண்டைக்கு பின், மனமுடைந்த சரண்யா, குழந்தையை முதலில் துாக்கில் தொங்க விட்டு, பின் அவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியில் சென்றிருந்த குடும்பத்தார் வீட்டிற்கு வந்தபோது, குழந்தையும் தாயும் துாக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது, இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர் கூறினார். இது குறித்து சிவகாஞ்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!