போலி நகைகளை அடகு வைத்து மோசடி
வியாசர்பாடி:வியாசர்பாடி, பிரபல தனியார் நகை அடகு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிபவர் சுகன்யா, 32. இவரது நிறுவனத்தில், கடந்த மாதம் 5ம் தேதி, வியாசர்பாடி, சாமியார் தோட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், 40 கிராம் தங்க நகைகளை அடமானம் வைத்து, 1.44 லட்சம் ரூபாய் பெற்று சென்றுள்ளார்.
இந்த நிலையில், 11ம் தேதி தங்க நகை மதிப்பீட்டாளர், அடமானம் வைக்கப்பட்டிருந்த நகைகளின் மதிப்பை சரிபார்த்தபோது, அவை, தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை நகை என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில், 11ம் தேதி தங்க நகை மதிப்பீட்டாளர், அடமானம் வைக்கப்பட்டிருந்த நகைகளின் மதிப்பை சரிபார்த்தபோது, அவை, தங்க முலாம் பூசப்பட்ட பித்தளை நகை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, வங்கி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட முகவரிக்கு சென்று விசாரித்தனர். அப்போது, முகவரியும் போலியானது என்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நிறுவனத்தினர், தங்க நகை எனக் கூறி பித்தளை நகை கொடுத்து ஏமாற்றிய நபரை கண்டுபிடித்து, பணத்தை மீட்டு தருமாறு வியாசர்பாடி போலீசில் நேற்று புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!