ADVERTISEMENT
சென்னை:தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் ஆதரவுடன் மேயர் ராதாகிருஷ்ணன் கூடைப்பந்து கழகம் நடத்தும், 19வது ஆண்டு மாநில அளவிலான மின்னொளி கூடைப்பந்து போட்டிகள், சென்னை நேரு விளையாட்டு அரங்கிலும், மாநகராட்சி விளையாட்டு திடலிலும் நடக்கின்றன.
இரு பாலருக்குமான இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் 46 அணிகளும், பெண்கள் பிரிவில் 14 அணிகளும் பங்கேற்றுள்ளன. ஆண்களுக்கான போட்டிகள் 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையிலும், பெண்களுக்கான போட்டிகள் 'நாக் அவுட்' முறையிலும் நடந்து வருகின்றன.

இதில், நேற்று முன்தினம் இரவு, மாநகராட்சி விளையாட்டு அரங்கில் நடந்த ஆண்களுக்கான பிரிவுக்கான போட்டியில், சென்னை துறைமுக அணியுடன் மினியன்ஸ் கூடைப்பந்து குழும அணி மோதியது.
விறுவிறுப்பான ஆட்டத்தில், கடைசி நிமிடத்தில் மினியன்ஸ் அணி வீரர்கள் செய்த இரு தவறுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய துறைமுக அணியினர், இறுதியில் 69 - 65 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றனர்.
அதற்கு முன்னதாக நடந்த மற்றொரு போட்டியில், அம்பத்துார் அணி 69 - 31 என்ற புள்ளிக் கணக்கில் லயன்ஸ் அணியையும், ஜவஹர் அணி 53 - 35 என்ற புள்ளிக்கணக்கில் லேக்கர்ஸ் அணியையும் வீழ்த்தின. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!