ADVERTISEMENT
சென்னை:திருவள்ளூர் மாவட்ட அளவிலான, 2023ம் ஆண்டுக்கான, பிரீமியர் ஹாக்கி லீக் போட்டி, அம்மாவட்ட ஹாக்கி அமைப்பு சார்பில், சென்னை, போரூரில் உள்ள தனியார் பல்கலை மைதானத்தில் நடந்து வருகிறது.
வாரத்தின் இறுதி நாட்களில், 'லீக்' முறையில் போட்டிகள் நடக்கின்றன. நேற்று முன்தினம், நடந்த ஒரு போட்டியில், எஸ்.எம்., நகர் அணியை, டாலர் ஹாக்கி கிளப் அணி எதிர்கொண்டது.
வாரத்தின் இறுதி நாட்களில், 'லீக்' முறையில் போட்டிகள் நடக்கின்றன. நேற்று முன்தினம், நடந்த ஒரு போட்டியில், எஸ்.எம்., நகர் அணியை, டாலர் ஹாக்கி கிளப் அணி எதிர்கொண்டது.
ஆட்டத்தின் 18வது நிமிடத்தில், எஸ்.எம்., நகர் அணி வீரர் ராஜா, பீல்ட் கோல் அடிக்க, அந்த அணி 1-0 என, முன்னிலை பெற்றது.
தொடர்ந்து 35வது நிமிடத்தில் பிரபாகரன், தன் பங்குக்கு ஒரு கோல் அடிக்க, 2-0 என, முன்னிலை பெற்றது. இறுதிவரை, டாலர் அணியால் ஒரு கோல் கூட அடிக்க இயலவில்லை. இதனால், எஸ்.எம்., நகர் அணி 2-0 என வெற்றி பெற்றது.
மற்றொரு போட்டியில் பட்டாபிராம் ஸ்டிரைக்கர்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் தியாந்த் வீரன்ஸ் அணியை தோற்கடித்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!