இளம்பெண்ணை ஏமாற்றிய மருத்துவர் நடவடிக்கை எடுப்பதில் போலீசார் தயக்கம்?
அங்கு, ஒப்பந்த அடிப்படையில் மருத்துவராக வேலை பார்த்த, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகியுள்ளனர்.
திருமண ஆசைவார்த்தை கூறி, அப்பெண்ணிடம் நெருக்கமாக இருந்த மருத்துவர், திடீரென அந்த பெண்ணிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார்.
இது குறித்து, அப்பெண் கேட்டதற்கு, நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை, இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த அப்பெண், இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள், கடந்த ஏப்ரல் மாதம், எண்ணுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இருப்பினும், புகார் மீது எந்தவொரு நடவடிக்கையும் இல்லை என, தெரிகிறது.
இதற்கிடையில், புகாருக்கு ஆளான மருத்துவருக்கு, இரு மாதங்களுக்கு முன், வேறொரு பெண் மருத்துவருடன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் கூறியதாவது:
என் மகளை திருமண ஆசைக் காட்டி மருத்துவர் ஏமாற்றி விட்டார். இது குறித்து, போலீசில் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. தற்போது, அந்த மருத்துவருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடந்து விட்டதாக கூறப்படுகிறது. அவர் மீது, கடும் நடவடிக்கை வேண்டும்.
புகாரின் அடிப்படையில், பெண்ணுடன் மொபைல் போனில் பேசிய உரையாடல்கள் மற்றும் பதிவுகளை வைத்து வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். 40 நாட்கள் ஆகியும் எந்தவொரு நடவடிக்கையும் கிடையாது.
இதுவரை, 10 லட்ச ரூபாய்க்கும் மேல் செலவழித்து, தன்மீது பழி வராமல், மருத்துவர் சபரிமோகன் பார்த்துக் கொண்டுள்ளார்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!