ADVERTISEMENT
கும்மிடிப்பூண்டி:சென்னை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலை வளாகத்தில், மாநில அளவிலான 'கிக் பாக்சிங்' சாம்பியன்ஷிப் போட்டிகள், கடந்த வாரம் நடந்தன.
இதில், கும்மிடிப்பூண்டி, ஆத்துப்பாக்கத்தைச் சேர்ந்த பரந்தாமன் -- கார்த்திகா தம்பதியின் மகன் ஜீவன், 13, பங்கேற்றார்.
இதில், கும்மிடிப்பூண்டி, ஆத்துப்பாக்கத்தைச் சேர்ந்த பரந்தாமன் -- கார்த்திகா தம்பதியின் மகன் ஜீவன், 13, பங்கேற்றார்.
கும்மிடிப்பூண்டி, கே.எல்.கே., அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் இவர், 38 கிலோ எடை பிரிவில், வெள்ளி பதக்கம் வென்று இரண்டாம் இடத்தை கைப்பற்றினார்.
அதன் மூலம், வரும் ஆகஸ்ட் மாதம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான 'கிக் பாக்சிங்' போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
இவர், கடந்தாண்டு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடந்த 'கிக் பாக்சிங்' போட்டியில், வெண்கல பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
மாணவனை, பயிற்சியாளர் ராஜேஷ், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!