ADVERTISEMENT
சென்னை:தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பாக, திருவள்ளூர் மாவட்ட அளவிலான லீக் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது.
நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் குழுக்களைச் சேர்ந்த அணிகள், மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு, 'லீக்' முறையில் மோதுகின்றன. போட்டிகள், 30 ஓவர் அடிப்படையில் நடக்கின்றன.
நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் குழுக்களைச் சேர்ந்த அணிகள், மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டு, 'லீக்' முறையில் மோதுகின்றன. போட்டிகள், 30 ஓவர் அடிப்படையில் நடக்கின்றன.
'ஏ' மண்டலம், டிவிஷன் மூன்றுக்கான போட்டியில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த யுனிவர்சல் கிரிக்கெட் கிளப் அணியுடன், சுந்தர் கிரிக்கெட் கிளப் அணி, திருவள்ளூரில் பலப்பரீட்சை நடத்தியது.
முதலில் களமிறங்கிய யுனிவர்சல் அணி, 29.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 189 ரன்கள் எடுத்தது. வீரர்கள் செந்தில்குமார், கார்த்திக்குமார், முறையே 62, 65 ரன்களை குவித்தனர்.
அடுத்து களமிறங்கிய சுந்தர் அணிக்கு, யுனிவர்சல் அணியின் பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் அந்த அணி வீரர்கள், ரன் எடுக்க திணறியதோடு, அவ்வப்போது விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர்.
இறுதியில், சுந்தர் அணி 26.4 ஓவர்களில் 132 ரன்களில் ஆட்டம் இழக்க, யுனிவர்சல் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது. அந்த அணியின் தனகோட்டி 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!