இதில், கோட்டூர்புரம், சத்யா நகர் மற்றும் எம்.ஆர்.சி.நகரில், ஆற்றங்கரையோரம் நடப்பட்ட 50 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்ந்துள்ள உயரம், பசுமையின் பரப்பு உள்ளிட்டவை குறித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, நேற்று பார்வையிட்டார்.
அதே வார்டில், ஆற்றங்கரையோரம், 9.41 கோடி ரூபாயில் நடக்கும் பூங்கா மற்றும் விளையாட்டு திடல் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்து, குடிநீர், கழிவுநீர் வசதிகள் குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், குறிப்பிட்ட கால அவகாசத்தில் பணிகளை முடிக்க, ஒப்பந்ததாரரிடம் உத்தரவிட்டார்.
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை, கூடுதல் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, நேற்று ஆய்வு செய்தார்.
செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர், அடையாறு ஆற்றில் கலக்கும் இடத்திலிருந்து, அனகாபுத்துார் பாலம் வரை அகலப்படுத்தும் பணியை பார்வையிட்டார்.
மேலும், ராயபுரம் மண்டலம், ஜி.பி.சாலை, அண்ணாசாலை, காந்தி இர்வின் சாலையில் நடக்கும் மழைநீர் வடிகால் பணியை பார்வையிட்டார்.
ஆய்வின்போது, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாக ஆணையர் பொன்னையா உட்பட பலர் இருந்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!