இன்று இனிதாக (4.6.23 / ஞாயிறு)
ஆன்மிகம் �
உழவாரப்பணி: தாயுமானவர் அமைப்பின், 75வது உழவாரப் பணி. காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை. இடம்: ஜெகதாம்பிகை உடனுறை திருவலிதாயநாதர் கோவில், வடக்கு மாட வீதி, பாடி. தொடர்புக்கு: 99620 96984.
உழவாரப்பணி: பங்கேற்பு: வேளச்சேரி உழவாரப் பணி மன்றத்தின் ந.ஆடலரசன் குழுவினர், காலை, 8:30 மணி முதல். இடம்: அகஸ்தீஸ்வரர் கோவில், பொன்னேரி. தொடர்புக்கு: 94451 21080.
மஹா கும்பாபிஷேகம்: இரண்டாம் கால யாக பூஜை, ஹோமம் - காலை 8:30 மணி முதல். மூன்றாம் கால யாக பூஜை - மாலை 5:30 மணி முதல். இடம்: மஹா மேரு ராகவேந்திரர் கோவில், வில்லிவாக்கம்.
பிரம்மோற்சவ விழா: புஷ்ப பல்லக்கு - இரவு 8:00 மணி. இடம்: காளிகாம்பாள் கமடேஸ்வரர் கோவில், தம்பு செட்டி தெரு, சென்னை - 1.
பிரம்மோற்சவ விழா: சாந்தி அபிஷேகம் - மாலை. இடம்: சொர்ணாம்பிகை உடனுறை அகத்தீஸ்வரர் கோவில், வில்லிவாக்கம்.
கூட்டு பிரார்த்தனை: சாவித்திரி வாசித்தல் - காலை 10:00 மணி. இடம்: அரவிந்தர் சொசைட்டி, 5, ஸ்மித் சாலை, அண்ணா சாலை.
அகண்ட நாம கீர்த்தனம்: உலக நலன், அமைதிக்கான கீர்த்தனம். காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்:அபயம், யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், 121, எட்டாவது குறுக்கு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி. தொடர்புக்கு: 63742 26735.
மஹா வேள்வி: உலக நன்மைக்காக லலிதா பரமேஸ்வரியின் அருள் வேண்டி இந்து புரட்சி முன்னணி நடத்தும் யாகம். காலை முதல் மாலை வரை. இடம்:கே.வி.டி., கிரீன் சிட்டி, பழைய பெருங்களத்துார்.
உபன்யாசம்
ஞானானந்த லீலாம்ருதம் - கோவிந்தபுரம் பாலாஜி பாகவதர் - மாலை 6:20 முதல் இரவு 8:20 வரை. இடம்: நாரத கான சபா, டி.டி.கே., சாலை, ஆழ்வார்பேட்டை.
ஹரி நாம சங்கீர்த்தனம்: வி.கோபால சந்தர பாகவதர், மாலை, 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.
பொது
கூத்துப்பட்டறை: பத்மஸ்ரீ என்.முத்துசாமியின் 'படுகளம்', இரவு 7:00 மணி. இடம்: கூத்துப்பட்டறை மீனாட்சி, 58/16, 3வது பிரதான சாலை, அய்யப்பா நகர், விருகம்பாக்கம். தொடர்புக்கு: 89395 48469.
ஆண்டு விழா: சர்வதேச நகைச்சுவையாளர் சங்கத்தின் 30வது ஆண்டு விழா. பங்கேற்பு: கிரிஷ் சந்தானம், கவின் வாலிதாசன், மாலை 4:00 மணி. இடம்: எஸ்.சி.எஸ்., பள்ளி வளாகம், 30, ராமச்சந்திரா சாலை, நேரு நகர், குரோம்பேட்டை, தொடர்புக்கு: 98411 69626.
இலவச கண் மருத்துவ முகாம்: கருத்தரங்கம். காலை 9:00 மணி. இடம்: பாலகிருஷ்ணா கண் மருத்துவமனை ஆராய்ச்சி மையம், 11, சாஸ்திரி தெரு, காவேரி நகர், சைதாப்பேட்டை.
சங்கு நாத பயிற்சி: சங்கு நாதம் அறிவியல் வகுப்பு. காலை 7:00 முதல் 9:00 மணி வரை. இடம்: டன்லப் திறந்தவெளி மைதானம், அம்பத்துார்.
கைலாய வாத்திய பயிற்சி: காலை 10:00 மணி. இடம்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவில், அரசன்கழநி.
இலவச கோடை கால பயிற்சி: ஆண், பெண்களுக்கான தற்காப்பு கராத்தே பயிற்சி, மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை. இடம்: அஜய் ஆர்ட்ஸ் ஆப் வேர்ல்டு, ரங்கநாதபுரம், மேடவாக்கம், தொடர்புக்கு: 99412 29595.
பொருட்காட்சி: லண்டன் பாலம் கண்காட்சி, பொருட்காட்சி. மாலை 4:00 முதல் இரவு, 10:00 மணி வரை. இடம்: ரயில்வே மைதானம், தாம்பரம். தொடர்புக்கு: 99523 39023.
கண்காட்சி: காட்டன் - பட்டு கண்காட்சி மற்றும் விற்பனை. காலை 10:30 முதல் இரவு, 8:30 வரை. இடம்: கோ - ஆப்டெக்ஸ் கண்காட்சி மைதானம், 350, பாந்தியன் சாலை, எழும்பூர். தொடர்புக்கு: 08850 02824.
மலர் கண்காட்சி: தோட்டக்கலை, மலை பயிர்கள் துறை சார்பிலான கண்காட்சி. காலை முதல் மாலை வரை. இடம்:செம்மொழிப் பூங்கா, ராதாகிருஷ்ணன் சாலை, தேனாம்பேட்டை.
புகைப்படக் கண்காட்சி: செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், கருணாநிதி 100 புகைப்பட கண்காட்சி. காலை முதல் மாலை வரை. இடம்:கலைவாணர் அரங்கம், வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி.
கோடை விற்பனை கண்காட்சி: மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் வீட்டு உபயோகப் பொருட்கள், கைவினை, மர சிற்ப பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை. காலை 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை. இடம்:அன்ன தெரசா மகளிர் வளாகம், நுங்கம்பாக்கம்.
கண்காட்சி: இந்திய ரயில்வேயின் வரலாறு, ரயில்களின் இயக்கம், தொழில்நுட்பம் குறித்த கண்காட்சி, காலை முதல் மாலை வரை. இடம்: சென்னை ரயில் மியூசியம், ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலை வளாகம், பெரம்பூர்.
கண்காட்சி: காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை. இடம்: ஏ.வி.எம்., ஹெரிடேஜ் மியூசியம், வடபழநி.
நாச்சியார் கோலப்பல்லக்கு: நேரம்: காலை 9:00 மணிக்கு வரதர் மண்டப திருமஞ்சனம். மாலை 5:00 மணிக்கு வரதர் நாச்சியார் திருக்கோல பல்லக்கு புறப்பாடு. இடம்: திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவில். அங்கம் பூம்பாவையாக்குதல்: நேரம்: காலை 10:00 மணி முதல் திருஞானசம்பந்தர் ஒன்பதாம் நாள் விழா. அங்கம் பூம்பாவையாக்குதல் ஐதீகம். இடம்: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில்.
கலை நிகழ்ச்சிகள்: நேரம்: மாலை 6:00 மணிக்கு வைகாசி விசாகப் பெருவிழாவின் விடையாற்றி விழாவில் சரண்யாஸ் நிரித்யா வித்யாலயா மாணவர்கள் பரதநாட்டியம். இரவு 7:00 மணிக்கு அனுகிரஹா ஆதிபகவனின் அருள்வாய் குகனே சொற்பொழிவு. இடம்: வடபழநி, ஆண்டவர் கோவில்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!