நேற்று முன்தினம் நள்ளிரவு 1:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 3:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணிக்கு நடந்த சாயரட்சை தீபாராதனைக்கு பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7:15 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடந்தது.விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பழநி
பழநி முருகன் கோயில் உபகோயிலான பெரியநாயகியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா மே 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஜூன் 5 வரை நடக்கும் இவ்விழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.
ஜூன் 1 ல் முத்துக்குமாரசுவாமிக்கு , வள்ளி-தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை 4:39 மணிக்கு துவங்கியது. வள்ளி, தெய்வானையுடன் சுவாமி எழுந்தருள 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்ற பக்தி கோஷத்துடன் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரானது நான்கு ரதவீதிகளிலும் வலம் வந்தது. கோயில் யானை கஸ்துாரி தேர் பின்னால் வர மாலை 5:42 மணிக்கு நிலைக்கு வந்தது.இதன் பின் தேர்க்கால் பார்த்தல் நடந்தது. கோயில் இணை ஆணையர் பிரகாஷ், டி.எஸ்.பி., சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!