தனியார் கிளப்பில் தீ
எழும்பூர், சென்னை, எழும்பூர், எத்திராஜ் சாலையில் பிரசிடென்சி கிளப் என்ற தனியார் விடுதி உள்ளது. முதல் மாடியில் உள்ள மேலாளர் அறையில் நேற்று திடீரென தீப்பற்றியது.
தகவல் கிடைத்து, தேனாம்பேட்டை, எழும்பூர் பகுதியில் இருந்து தீயணைப்பு படை வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.
மேலாளர் அறையில் இருந்த 'ஏசி'யின் மின்கசிவால் தீப்பிடித்தது தெரியவந்துள்ளது. எழும்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!