ஸ்டெர்லைட் ஆலையில் கழிவு அகற்றுவதை கண்காணிக்க குழு
துாத்துக்குடி:''உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை அகற்றும் பணி, ஒன்பது பேர் குழுவினரால் கண்காணிக்கப்படும்,'' என, துாத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
துாத்துக்குடியில் மூடிக்கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.
துாத்துக்குடியில் மூடிக்கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.
இது குறித்து துாத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் கூறியதாவது:
ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை தனியார் நிறுவனம் மூலம் அகற்ற திட்டமிட்டுள்ளோம்.
இதை கண்காணிக்க சப் - கலெக்டர் கவுரவ் குமார் தலைமையில் ஒன்பது பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
டி.எஸ்.பி., மாசு கட்டுப்பாட்டு வாரிய இன்ஜினியர், தீயணைப்பு அலுவலர், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் இருவர் உள்ளிட்ட ஒன்பது பேர் அதில் இடம்பெற்றிருப்பர்.
ஆலை கழிவுகள் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும் அகற்றப்படும். ஆலையில் எப்போதும் போலீசார் பாதுகாப்பில் இருப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!