போத்தீஸ் ஸ்வர்ண மஹால் விளம்பர துாதரானார் ஜோதிகா
சென்னை, போத்தீஸ் ஸ்வர்ண மஹால் தங்க நகை நிறுவனத்தின் விளம்பர துாதராக, பிரபல நடிகை ஜோதிகா நியமிக்கப்பட்டு உள்ளார்.
இது தொடர்பாக, போத்தீஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் போத்தீஸ் ரமேஷ், நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகம், கேரளாவின் முன்னணி தங்க வணிக நிறுவனமான போத்தீஸ் ஸ்வர்ண மஹாலின் விளம்பர துாதராக, தேசிய விருது பெற்ற நடிகை ஜோதிகா நியமிக்கப்பட்டு உள்ளார்.
போத்தீஸ் ஸ்வர்ண மஹால், இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம் செய்துள்ள, 'ரிவர்சபிள்' தங்க நகையான, ஸ்வர்ண லக்ஷண கலெக் ஷனுக்கு, பிரத்யேக விளம்பர துாதராக ஜோதிகா இருப்பார்.
இந்த நகைகளின் ஒரு பக்கம் இத்தாலி கலை நயத்திலும், மறுபக்கம் 'ஆன்டிக்' கலைநயத்திலும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நேரத்தில், தனித்துவமான ரிவர்சபிள் தங்க நகை, வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய சேமிப்பை தரும்.
ஸ்வர்ண லக் ஷனா கலெக் ஷனில் மணப்பெண் செட்டுகள், எட்டு கிராம் கம்மல், 16 கிராம் பிரேஸ்லெட், 24 கிராம் நெக்லஸ் போன்ற தங்க நகைகள், சென்னை குரோம்பேட்டை, நெல்லை, திருவனந்தபுரம் ஷோரூம்களில் மட்டும் கிடைக்கும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!