ADVERTISEMENT
திருவண்ணாமலை:திருவண்ணாமலையில், கலெக்டரை கண்டித்து, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு பிரிவில் தலைமை மருத்துவராக கமலக்கண்ணன் பணிபுரிகிறார்.
திருவண்ணாமலை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு பிரிவில் தலைமை மருத்துவராக கமலக்கண்ணன் பணிபுரிகிறார்.
இவர் பணி தொடர்பான பிரச்னைகள் குறித்து, கலெக்டர்முருகேஷை கடந்த வாரம் சந்தித்தார். அப்போது கலெக்டர், கமலக்கண்ணனை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மருத்துவக்கல்லுாரியில் பணியாற்றும் டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் நேற்று புறநோயாளிகள் பிரிவு முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, கலெக்டர் முருகேைஷ கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இது குறித்து டாக்டர்கள் கூறியதாவது:
டாக்டர் என்றும் பார்க்காமல், அநாக ரிகமாக கலெக்டர் முருகேஷ் பேசி உள்ளார். இது தவறான உதாரணம்.
இது நீடித்தால், அரசு மருத்துவமனையில் பணிபுரிவது கடினமாகி விடும்.
தவறு செய்திருந்தால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு தவறாக பேசுவது ஏற்புடையதல்ல.
இனி எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை வரக்கூடாது. கலெக்டர் இது தொடர்பாக விளக்கம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!