மழைநீர் வடிகால் பணி துவங்குவது எப்போது?
தேனாம்பேட்டை, தேனாம்பேட்டை மண்டலத்தில், மழை நீர் வடிகால் பணிகள் விரைவில் துவங்க உள்ளன.
தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள 110, 111, 112, 115, 117, 118, 119, 123, மற்றும் 125வது வார்டு பகுதிகளில், மழைநீர் வடிகால் பணிகள் நடக்க உள்ளன.
இதில் நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அடங்கும். இதன் திட்ட மதிப்பீடு, 3.5 கோடி ரூபாய்.
தேனாம்பேட்டை மண்டலத்தைப் பொறுத்தவரை, 9 வார்டுகளில் உள்ள, 19 தெருக்களில், மொத்தம் 8.39 கி.மீ., துாரத்திற்கு மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதற்கான ஆயத்த பணிகள், தற்போது நடந்து வருகின்றன. இன்னும் சில வாரங்களில், இதற்கான பணியை துவங்க, மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!