ADVERTISEMENT
வானகரம், வானகரத்தில், சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களை கட்டுப்படுத்த, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மதுரவாயல் முதல் ஸ்ரீபெரும்புதுார் சுங்கச்சாவடி வரை, சாலை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், மதுரவாயல் -- பூந்தமல்லி வரை சாலை விரிவாக்க பணிகள் முடிக்கப்பட்டு, சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வானகரம் அருகே சர்வீஸ் சாலையில், அப்பகுதியில் உள்ள உணவகம் மற்றும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, வானகரம் சர்வீஸ் சாலையிலுள்ள வாகன ஆக்கிரமிப்புகளை கட்டுப்படுத்த, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!