ADVERTISEMENT
குப்பை கொட்டுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்
பல்லாவரம்- - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், ஈச்சங்காடு மேம்பாலத்திலிருந்து இடப்பக்கம் வழியாக கீழ்க்கட்டளை, மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் அணுகுசாலை நெடுகிலும் குப்பை குவிந்து கிடக்கிறது.
அப்பகுதியிலுள்ள தனியார் நிறுவனங்கள், உணவகங்களே இங்கு குப்பை, காலி மது பாட்டில்கள், உணவுக் கழிவுகள் உள்ளிட்டவற்றை கொட்டுகின்றன. இதனால், அவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் சுகாதார சீர்கேட்டுக்கும், முகச் சுளிப்புக்கும் ஆளாகின்றனர்.
சுகாதார பணியாளர்கள், வாரம் இருமுறை குப்பையை அகற்றினாலும், மீண்டும் மீண்டும் குப்பை கொட்டப்படுகிறது.இங்கு குப்பை கொட்டுவோருக்கு அபாரதம் விதித்து, அணுகு சாலை துாய்மையாக இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜே.மகாலட்சுமி, 35, கீழ்க்கட்டளை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!