தொழிற்பேட்டையில் வியாபாரிகள் மறியல்
அம்பத்துார், அம்பத்துார் தொழிற்பேட்டையில், மே 18ல் தொழில் துறை அமைச்சர் அன்பரசன் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள 'அய்மா' வளாகத்தில், தொழில்துறை திட்டங்கள் குறித்து பேசினார்.
அப்போது, இந்த தொழிற்பேட்டை, நடைபாதை கடைகள், சாலை ஆக்கிரமிப்பு, குப்பை குவியலுடன் பராமரிப்பற்ற சூழலில் உள்ளதாக கூறினார். இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, அம்பத்துார் தொழிற்பேட்டை சாலைகளில், நடைபாதை கடை வியாபாரிகளிடம், கடைகளை அகற்றும் நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்பட்டது.
இதில் அதிருப்தி அடைந்த வியாபாரிகள், தொழிற்பேட்டை பேருந்து நிலையம் எதிரில், சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர்.
அம்பத்துார் தொழிற்பேட்டை போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தினர். பின், 'சிட்கோ' தொழிற்பேட்டை நிர்வாக அலுவலகத்தை, வியாபாரிகள் முற்றுகையிட்டனர். உரிய தீர்வு காண்பதாக, அங்கு அதிகாரிகள் கூறியதும் கலைந்து சென்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!