ADVERTISEMENT
விருகம்பாக்கம்:கோயம்பேடு, மேட்டுக்குப்பம் காமராஜர் நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர் தீனதயாளன், 21. இவர், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு, சமீபத்தில் வெளியே வந்தார்.
மே 16ம் தேதி, விருகம்பாக்கம் ஏரிக்கரை தெருவில் நின்றிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த சோட்டா விக்கி உட்பட இருவர், முன்விரோதம் காரணமாக தீனதயாளன் மீது நாட்டு வெடிகுண்டு வீசி சென்றனர்.
வெடிகுண்டு வீசியது தொடர்பாக, நெற்குன்றத்தைச் சேர்ந்த மெர்ஸி விக்கி, 21, என்பவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவான சோட்டா விக்கி, கடந்த மாதம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இந்நிலையில், நாட்டு வெடிகுண்டு வீச உடந்தையாக இருந்த திருவள்ளூர் மாவட்டம் ஆட்டந்தாங்கலைச் சேர்ந்த சுரேஷ்குமார், 25, என்பவரை, விருகம்பாக்கம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!