கருணாநிதி புகைப்பட கண்காட்சி
சென்னை, சென்னை, கலைவாணர் அரங்கில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில், கருணாநிதி நுாற்றாண்டு விழா புகைப்படக் கண்காட்சி நடக்கிறது.
இக்கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
கண்காட்சியில், கருணாநிதி ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், அவற்றால் மக்கள் பெற்ற பயன்கள், இளமை காலம் முதல் அவர் மேற்கொண்ட அரசியல் பயணம், முக்கிய தலைவர்கள் உடனான சந்திப்புகள் தொடர்பான புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
இப்புகைப்படக் கண்காட்சி, இம்மாதம் முழுதும் நடக்கும். அலுவலக நேரத்தில் பொதுமக்கள் பார்வையிடலாம் என, செய்தி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!