3 மணி நேரத்தில் குழந்தைகள் மீட்பு
செங்கல்பட்டு:மதுராந்தகம் அடுத்த மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு மனைவி அமுதா, 4 வயது மகள், 2 வயது மகன் உள்ளனர்.
தற்போது இவர், செங்கல்பட்டு ராட்டினங்கிணறு அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் வசித்து வருகிறார். தம்பதியர் சாலையோரம் உள்ள மதுபான பாட்டில்களை சேகரித்து, காயலான் கடைகளில் விற்பனை செய்கின்றனர்.
தற்போது இவர், செங்கல்பட்டு ராட்டினங்கிணறு அருகே உள்ள ரயில்வே மேம்பாலத்தின் கீழ் வசித்து வருகிறார். தம்பதியர் சாலையோரம் உள்ள மதுபான பாட்டில்களை சேகரித்து, காயலான் கடைகளில் விற்பனை செய்கின்றனர்.
நேற்று முன்தினம் மதுபோதையில் துாங்கி கொண்டிருந்த தம்பதி, நேற்று அதிகாலை 1:00 மணிக்கு, அழுதுகொண் டிருந்தனர். அப்பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களிடம் விசாரித்ததில், குழந்தைகளை காணவில்லை என,தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில், போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, குமாரின் நண்பர் இம்ரான் என்பவர், குழந்தைகளை அழைத்து சென்றது தெரியவந்து,
அதன்பின், அவரிடம் இருந்து குழந்தைகளை மீட்ட போலீசார், தம்பதியிடம் ஒப்படைத்தனர். காணாமல் போன குழந்தைகளை மூன்று மணி நேரத்தில் மீட்ட போலீசாரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!