Advertisement

ஊழலுக்கு எதிராக நடைபயணம் ஜூலை 9ல் ராமேஸ்வரத்தில் துவக்கம்

ADVERTISEMENT
தூத்துக்குடி:''தி.மு.க.,வின் ஊழலுக்கு எதிராக பா.ஜ.,வின் நடைபயணம் ஜூலை 9ல் ராமேஸ்வரத்தில் துவங்குகிறது, ''என அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை கூறினார்.

இதுகுறித்து, பா.ஜ., தமிழக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தி.மு.க., ஒன்றிய செயலர்களின் கையில் உள்ளது.

மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் அதிகாரிகள் மத்தியில் கூறியதற்கு, தமிழக முதல்வர் இதுவரை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மேகதாது அணை கட்ட முயற்சித்தால் நாங்கள் அதை தடுத்து நிறுத்துவோம்.

தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலனுக்கான திட்டங்களை தி.மு.க., அரசு செயல்படுத்தவில்லை. மத்திய அரசு அளிக்கும் நிதியும் திரும்பச் செல்கிறது.

தென் தமிழகத்தை மையமாக வைத்து சிறப்பு முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வேண்டும். துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவு என்பது பிற்காலத்தில் தெரியவரும். தாமிரத்துக்காக சீனா உள்ளிட்ட நாடுகளிடம் கைகட்டி நின்று கொண்டிருக்கிறோம்.

தி.மு.க., அரசின் ஊழலுக்கு எதிராக பா.ஜ., நடைப்பயணம் ஜூலை 9 ல் ராமேஸ்வரத்தில் துவங்குகிறது. அதற்கு முன்னதாக ஜூலை முதல் வாரத்தில் தி.மு.க. பைல்ஸ் எனும் தி.மு.க. ஊழலின் இரண்டாம் பாகத்தை வெளியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து (1)

  • Jaykumar Dharmarajan - Madurai,இந்தியா

    திமுக அரசு தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளையும், அதை செய்ய தவறியதையும், தற்போதய அரசில் தலைமையான முதலமைச்சர் தடுக்க முடியாத மணல் கொள்ளை, அதிகரிக்கும் கொலை, கொள்ளை போதைப் பொருட்கள் விற்பனை. லன்ஞ லாவன்களை தக்க ஆதாரத்தோடு மக்களிடம் எடுத்துரைத்து இனி ஆட்சிக் காலம் முடியும் வரையாவது மக்களுக்கு நல்லது செய்ய இது போன்ற நடைப் பயணங்கள் வரவேற்கத்தக்கவையே.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement