ADVERTISEMENT
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த வைகாசி மாத பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
வைகாசி மாத வளர்பிறை பிரதோஷ பூஜை நேற்று முன்தினம் நடந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கோவில் கொடிமரம் அருகேயுள்ள அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரில் சிறிய நந்தி, ஆயிரங்கால் மண்டலம் அருகேயுள்ள பெரிய நந்தி ஆகியவற்றுக்கு மஞ்சள், பால், தயிர், பன்னீர், சந்தனம், எலுமிச்சை, பஞ்சாமிர்தம், விபூதி, இளநீர், தேன் உட்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று 'அண்ணாமலையாருக்கு அரோகரா' எனவும் 'ஓம் நமசிவாயா' எனவும் கோஷமிட்டு வழிபட்டனர்.

கிரிவலம் நேரம்
பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கின்றனர். வைகாசி மாத பவுர்ணமி திதி இன்று காலை 10:54 மணிக்கு துவங்கி, நாளை காலை 9:11 மணிக்கு நிறைவடைகிறது.
இந்த நேரமே கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பவுர்ணமியை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து விடுவர் என்பதால், அண்ணாமலையார் கோவிலில் இரண்டு நாட்களுக்கு அமர்வு தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!