ADVERTISEMENT
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், சாராய விற்பனையை தடுக்க தவறிய போலீஸ் ஏட்டு, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில் போலீசார் சாராய வேட்டை நடத்தினர். இதில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராய விற்பனையை தடுக்க தவறிய ஒரு போலீஸ் எஸ்.ஐ., உள்பட ஐந்து போலீசார், சில நாட்களுக்கு முன்பு 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில், ஏட்டாக பணிபுரிந்து வந்த ராஜசேகர், 45, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறி, சாராய வியாபாரிகளுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை, 'சஸ்பெண்ட்' செய்து, எஸ்.பி., கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து (3)
ஏமாளி ஏட்டு கிடைத்து விட்டார். இனி உண்மையான குற்றவாளிகள் நிம்மதியாக இருக்கலாம்
இவர்களுக்கு சாராய வியாபாரிகள் 'அளந்ததற்கு' விசுவாசமாக இருக்க வேண்டாமா ? சஸ்பெண்ட் நாடகம் எதற்கு டிஸ்மிஸ் செய்தாலும் உட்கார்ந்து சாப்பிடும் அளவு சேர்த்திருப்பார்கள்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
போலீஸ் ஏட்டு ஒரு சிறிய மீன். பெரிய பெரிய திமிங்கலம் எல்லாம் மாட்டவில்லையே..