துாத்துக்குடியில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தி.மு.க., ஒன்றிய செயலாளர்களின் கையில் உள்ளது. போலீஸ் கையில் இல்லை. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படும் என துணை முதல்வர் சிவகுமார் அதிகாரிகள் மத்தியில் கூறியதற்கு தமிழக முதல்வர் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. அவர் தமிழகத்தின் உரிமைகளை தொடர்ந்து விட்டுக் கொடுத்து வருகிறார்.
மேகதாது அணை கட்ட முயற்சித்தால் நாங்கள் தடுத்து நிறுத்துவோம். நடை பயணமாக செல்வோம். பா.ஜ., அமலாக்கத்துறையை வைத்துபழிவாங்குகிறது என்ற முதல்வரின் குற்றச்சாட்டை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தமிழகத்தில் அமலாக்கத்துறை எடுத்து வரும் நடவடிக்கையை கண்டு முதல்வர் பயப்படுகிறார்.
இந்தியாவுக்கு பின்னடைவு
தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலனுக்காக அரசு திட்டங்களை செயல்படுத்தவில்லை. மத்திய அரசு அளிக்கும் நிதியும் திரும்ப செல்கிறது. எதிர்க்கட்சிகள் புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பை புறக்கணித்துள்ளனர். 2024 தேர்தலில் அவர்கள் பார்லிமென்டை விட்டு வெளியே செல்வார்கள்.
தென் தமிழகத்தை மையமாக வைத்து சிறப்பு முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த வேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவு என்பது பிற்காலத்தில் தெரியவரும்.
இன்று தாமிரத்திற்காக சீனா உள்ளிட்ட நாடுகளிடம் கைகட்டி நின்று கொண்டிருக்கிறோம். எஸ்.வி.சேகர் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அண்ணாமலை 'நான் யாருக்கும் விரோதி இல்லை. பழைய பேச்சை வைத்து என்னை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன். நான் எப்போதும் இப்படித்தான் இருப்பேன்.
தி.மு.க.,வின் ஊழலுக்கு எதிராக பா.ஜ., நடை பயணம் ஜூலை 9ல் ராமேஸ்வரத்தில் துவங்குகிறது. அதற்கு முன்னதாக ஜூலை முதல் வாரத்தில் தி.மு.க. பைல்ஸ் எனும் தி.மு.க. ஊழலின் இரண்டாம் பாகத்தை வெளியிடுவோம், என்றார்.
சர்ச்சில் பிரார்த்தனை
முன்னதாக துாத்துக்குடி பனிமயமாதா சர்ச்சிற்கு சென்ற அண்ணாமலை பிரார்த்தனை செய்தார். ஆலய பங்கு தந்தை குமார் ராஜா புனித நீர் தெளித்து ஆசீர்வதித்தார். ரோஜா மாலையை பங்கு தந்தையிடம் கொடுத்து பனிமயமாதாவிற்கு அணிவித்தார். பட்டாடை மற்றும் மெழுகுவர்த்தியை காணிக்கையாக வழங்கினார். ஆக. 5ல் நடக்கும் ஆலய திருவிழாவில் பங்கேற்க அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்தனர்.
நான் யாருக்கும் விரோதி இல்லை. பழைய பேச்சை வைத்து என்னை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் நான் யார் பேச்சையும் கேட்க மாட்டேன். நான் எப்போதும் இப்படித்தான் இருப்பேன்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!