Advertisement

தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும்; ஆய்வு செய்த கமிஷனர் உறுதி

ADVERTISEMENT
திருநெல்வேலி:''திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் இருந்து தாமிரபரணியில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,'' என, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் தாமிரபரணி ஆறும், அதிலிருந்து பிரிந்து விவசாயத்துக்கு தண்ணீர் செல்லும் கோடகன் கால்வாய், திருநெல்வேலி கால்வாய், பாளையங்கால்வாய் ஆகிய கால்வாய்களும் உள்ளன.

கோடைக்காலங்களில் கால்வாய்களில் வெளியேறும் வீட்டு கழிவுநீர், தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.

தற்போது தாமிரபரணியில் குறைந்த அளவில் தண்ணீர் செல்வதால், அதில் கழிவுநீர் கலந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாதபடி மாசுபடுகிறது.

இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.

திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்திலும், கவுன்சிலர்கள் சாக்கடை நீர் தாமிரபரணியில் கலப்பதை தடுக்க வலியுறுத்தினர்.

இதன் எதிரொலியாக மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி நேற்று காலை, தாமிரபரணியில் சாக்கடை கலக்கும், 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஆய்வு செய்தார். பாதாள சாக்கடை நீரேற்று நிலையத்தையும் பார்வையிட்டார்.

அவர் கூறியதாவது:

கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தவிர்க்க, 235 கோடி ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது, 90 சதவீத பணிகள் முடிந்து விட்டன.

மூன்று கால்வாய்களிலும் அதன் ஓரங்களில் குடியிருக்கும் வீடுகளில் இருந்து கழிவுநீர் கலக்கிறது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அவர்களுக்கு'நோட்டீஸ்' வழங்கப்படும்.

பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக செயல்படுத்திய பின், கழிவுநீரை கால்வாயில் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆங்காங்கே பெரிய தொட்டிகள் அமைத்து, அங்கிருந்து கழிவுநீர் ராமையன்பட்டி குப்பை கிடங்கிற்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து (2)

  • Vidindha Vengai - Velacheri,சுரிநாம்

    இப்போ புரியுதா விடியல் ஆட்சியில் வேங்கைவயல் ஒரு மேட்டர் இல்ல. தமிழ் நாடு முழுசும் அதே நிலைமைதான். ஒரு குவாட்டர் அடிச்சிட்டு படுத்தா இந்த வேண்டாத கவலையெல்லாம் வராது.

  • Kundalakesi - Coimbatore,இந்தியா

    Ithu Tirunelveli issue mattum alla... It's also happening all over India. TN.. திருச்சி காவேரி Coimbatore நொய்யல் Chennai கூவம் Madurai வைகை Erode பவானி Tirunelveli Taamirabarani

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement