துப்பாக்கியால் சுட்டு, கத்தியால் வெட்டி பைனான்சியர் படுகொலை; 3 பேர் சரண்
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த மணலுார்பேட்டை- - திருவண்ணாமலை சாலை, பா.வு.ச., நகரில், மே 29 நள்ளிரவில், வாலிபர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்தார்.
தச்சம்பட்டு போலீசார் உடலை மீட்டுவிசாரித்ததில், அவர் பச்சப்பட்டு அடுத்த, தேவனுார்புதுாரைச் சேர்ந்த அருள்குமார், 37, என்பதும், 'பைனான்ஸ்' தொழில் செய்து வந்ததும் தெரிந்தது.
நேற்று முன்தினம் அவரை கொலை செய்த தாக, கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த முருக்கம்பாடி மாமலைவாசன், 31, இளங்கோ, 31, சூர்யா, 22, ஆகியோர், திருவண்ணாமலை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
அவர்களை வேலுார் மத்திய சிறையில் அடைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.
போலீசார் கூறியதாவது:
அருள்குமாருக்கும், மாமலைவாசனுக்கும் கொடுக்கல் - வாங்கல் தகராறு இருந்தது.
சம்பவத்தன்று தச்சம்பட்டு அருகே பைக்கில் வந்த அருள்குமாரை, மாமலைவாசன், அவரது கூட்டாளிகள் பைக்கில் துரத்திச்சென்று, நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனர்.
பின், கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு, நாட்டுத் துப்பாக்கி, கத்திகளை அருகிலுள்ள கிணறு, ஏரியில் வீசிவிட்டு தப்பினர். போலீஸ் விசாரணைக்கு பயந்து அவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!