ரயில் நிலையத்தில் குடிநீர் இல்லை
திருநெல்வேலி:திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்காதது உட்பட குறைகளை சீர் செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையம் கோடிக்கணக்கில் வருமானம் வரும் ரயில் நிலையங்களில் ஒன்றாகும். ஆனால் பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் செயல்படவில்லை. தட்கல் டிக்கெட் எடுக்க அதிகாலையில் வரும் பயணிகள் தரையில் அமரும் நிலை உள்ளது.

தானியங்கி படிக்கட்டு அடிக்கடி செயல்படாமல் உள்ளது என்பது உள்ளிட்ட குறைபாடுகளை சீர் செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் மாவட்டத் தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் நேற்று ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீஸ் மற்றும் ரயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி குறைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் போராட்டம் முடிவுக்கு வந்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!