கடலை வியாபாரிக்கு இரட்டை ஆயுள்
திருவண்ணாமலை:திருவண்ணாமலை அருகே, சிறுமியரிடம் பாலியல் சில்மிஷம் செய்த வேர்க்கடலை வியாபாரிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, திருவண்ணாமலை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
திருவண்ணாமலை அடுத்த தேனிமலையைச் சேர்ந்தவர் வீராசாமி, 46; வேர்க்கடலை வியாபாரி. இவர், 2016, ஜன., 5ல், திருவண்ணாமலை அருகே, 7 மற்றும், 10 வயது சிறுமியரை மிரட்டி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
இது குறித்து அந்த சிறுமியர், தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். சிறுமியரின் பெற்றோர் புகார்படி, திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார், வீராசாமியை, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.
திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி பார்த்தசாரதி, வழக்கை விசாரித்து, இரட்டை ஆயுள் தண்டனை மற்றும், 20 ஆயிரம் ரூபாய்அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!