ரூ.10 லட்சம் பீடி இலை துாத்துக்குடியில் பறிமுதல்
துாத்துக்குடி:துாத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பீடி இலையை போலீசார் பறிமுதல் செய்து வேன் டிரைவரை கைது செய்தனர்.
துாத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து, கடத்தல் நடக்க உள்ளதாக டவுன் டி.எஸ்.பி., சத்யராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் கண்காணித்தனர்.
துாத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து, கடத்தல் நடக்க உள்ளதாக டவுன் டி.எஸ்.பி., சத்யராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் கண்காணித்தனர்.
நேற்று முன் தினம் அதிகாலை திரேஸ்புரம் கடற்கரை பகுதிக்கு ஒரு லோடு வேன் வந்தது. போலீசைப் பார்த்ததும் வேனில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். வேன் டிரைவர் துாத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த சார்லஸ் பிடிபட்டார். வேனில் இருந்த 1,500 கிலோ பீடி இலையை பறிமுதல் செய்த போலீசார் சார்லசை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலையின் மதிப்பு 10 லட்சம் ரூபாய் என போலீசார் கூறினர். தப்பியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!