சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள் 7 போலீசாரிடம் விசாரணை
திருநெல்வேலி:திருநெல்வேலியில் ஏழு போலீசாரிடம், சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அம்பாசமுத்திரம் பகுதியில் போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் நான்கு வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
கல்லிடைக்குறிச்சி ஸ்டேஷனில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி உட்பட 10 போலீசாரிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர்.
சி.பி.சி.ஐ.டி., ஆர்கனைஸ்டு கிரைம் யூனிட் அலுவலகத்தில், விக்ரமசிங்கபுரத்தில் பணியாற்றிய பெண் எஸ்.ஐ., மற்றும் அம்பாசமுத்திரத்தில் பணியாற்றிய நான்கு போலீசாரிடம் கூடுதல் எஸ்.பி., சங்கர் விசாரணை நடத்தினார். சி.பி.சி.ஐ.டி., ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் உலகராணி இரண்டு போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!