ADVERTISEMENT
கூடங்குளம்:கூடங்குளம் அணு உலைக்கு இரண்டாவது முறையாக நான்கு கன்டெய்னர்களில் தளவாடப் பொருட்கள் வந்துள்ளன.
இந்தியா - ரஷ்யா நாடுகளுக்கிடையே கூட்டு முயற்சியில் கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு, தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து, மூன்று மற்றும் நான்காவது அணு உலைகள் அமைக்கும் பணிகள் 85 சதவீதம் முடிவடைந்துள்ளன. அவற்றில் விரைவில் மின்உற்பத்தி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஐந்து மற்றும் ஆறாவது அணு உலைகள் அமைக்க பூர்வாங்கப் பணிகள் மிகவேகமாக நடக்கின்றன. அதற்காக கடந்த 14ம் தேதி ரஷ்யாவில் இருந்து அணு உலை தளவாடங்கள் கொண்டு வரப்பட்டன.

இந்நிலையில், இரண்டாவது முறையாக நான்கு கன்டெய்னர் களில் அணு உலைகளுக்கான தளவாடப் பொருட்கள் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் துறைமுகத்திலிருந்து கப்பலில் துாத்துக்குடிக்கு வந்து சேர்ந்தது.
அங்கிருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் கூடங்குளத்துக்கு கொண்டு வரப்பட்டன.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!