Advertisement

கோவிலில் உண்டியல் எண்ணும் போது பணத்தை திருடிய 2 பெண்கள் சிக்கினர்

சங்கரன்கோவில்:சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோவிலில் உண்டியல் எண்ணும் போது, பணத்தைத் திருடிய இரண்டு பெண்கள் கையும் களவுமாக பிடிபட்டனர்.

சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோவிலில் உண்டியல் எண்ணும் பணி நேற்று முன் தினம் நடந்தது. சிவகாசியைச் சேர்ந்த 10 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். கோவில் உண்டியலை திறக்கும் போதும் உண்டியல் பணத்தை எண்ணும் போதும் 'வீடியோ 'பதிவு செய்ய வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், சங்கர நாராயணசுவாமி கோவிலில் உண்டியல் எண்ணும் பணி வீடியோ பதிவு செய்யப்பட்டது. கோவில் கண்காணிப்பாளர் சந்திரசேகர், அதைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு பெண், சேலையை உதறுவது போல பணத்தை எடுப்பதும், மற்றொரு பெண் பணத்தை எடுத்து சேலையில் சொருகி வைப்பதும் தெரிந்தது. இதுகுறித்து சந்திரசேகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சங்கரன்கோவில் டவுன் போலீசார் கோவிலுக்கு வந்து, சந்தேகத்துக்கு இடமான இரண்டு பெண்களிடமும் விசாரித்தனர். அப்போது அந்தப் பெண்கள் பணத்தை திருடியது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 18 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சிவகாசி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லட்சுமி,63, சிவகாசி விஸ்வநத்தம் தெருவைச் சேர்ந்த கலாவதி,63 ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement